அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வணங்கான் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, அருண் விஜயின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024 ம் ஆண்டு ஏப்ரல் பூஜையுடன் தொடங்கியது. கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘ரெட்ட தல’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே, இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இப்படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் அருண் விஜய் நிறைவு செய்துள்ளார். இந்த டப்பிங் பணியின் போது எடுத்த புகைப்படங்களை நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.