டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 ஏ தேர்வு முடிவு வெளியானது..!

 டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 ஏ தேர்வு முடிவு வெளியானது..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ,2 ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2 பணியில் 507 இடங்கள், குரூப் 2ஏ பணியில் ஆயிரத்து 820 பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் உள்ளன. இதற்கான குரூப்2, 2ஏ முதல் நிலை போட்டித் தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். . இந்த தேர்வுக்கான தற்காலிக விடைகுறியீடுகளை டி.என்.பி.எஸ்.சி. https://tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டது.

இந்தத் தேர்வுக்கான முடிவுகள் உத்தேசமாக வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி.குரூப்2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வு குறித்த முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ https://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

தேர்வு நடந்த 57 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேர்ச்சி அடையும் தேர்வர்கள் நேர்காணல் தேர்வை எதிர்கொள்வார்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...