ஆதார் – பான் லிங்க் பண்ணாதவங்களுக்கு எச்சரிக்கை!

 ஆதார் – பான் லிங்க் பண்ணாதவங்களுக்கு எச்சரிக்கை!
ஆதார் – பான் லிங்க் பண்ணாதவங்களுக்கு எச்சரிக்கை! உடனே பண்ணிடுங்க… மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைக்காவிட்டால் பான் கார்டு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கும் ஆதார் எதிலும் ஆதார்!
தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதோடு, வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் படிப்படியாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் ஆதார் பான் கார்டுகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்குப் பலமுறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

டிசம்பர் 31 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இணைப்புப் பணிகள் நிறைவடையாததாலும், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததாலும், 2020 மார்ச் 31ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டுகள் செயலிழப்பு செய்யப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. 2020 ஜனவரி 27 வரையில் மொத்தம் 30.75 கோடி பான் எண்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 17.58 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்படாமல் இருக்கின்றன. இவை அனைத்தும் முடக்கப்படும் என்று தெரிகிறது.

இணைப்பது எப்படி?
ஆன்லைன் மூலமாகவே ஆதார் கார்டு – பான் கார்டுகளை இணைக்கலாம். வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில், https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html என்ற முகவரியில் வாடிக்கையாளர்களே ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க முடியும். ஆதார் எண், பான் எண் இரண்டையும் அதில் கொடுத்த பிறகு ஆதார் அட்டையில் உள்ளது போலவே உங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்சா குறியீடு அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ரகசிய எண்ணை (OTP) பதிவிட்டு ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம்.

எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்கலாம். ஆதாருடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து UIDPAN<12 டிஜிட் ஆதார் எண்><10 டிஜிட் பான் எண்> என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...