தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021
தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021 தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு. 2019-20ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கும் என மதிப்பீடு. திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்.
நெல், சிறுதானியம், பயறு வகைகள், பருத்தியில் அதிக விளைச்சல் தரும் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். ஒப்பந்தங்கள் தொடர்பான பதிவு கட்டணங்கள், 1 சதவீதத்தில் இருந்து, 0.25 சதவீதமாக குறைக்கப்படும். சிறப்பு பொது விநியோக திட்டத்தில் 2020-21ம் ஆண்டிலும் துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் தரப்படும். பூச்சி மேலாண்மை நடவடிக்கை மேற்கொள்ள ரூ.20 கோடி.
ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை வழங்க அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு.” – ஓ.பி.எஸ்.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணனி திட்டம் தொடரும். இலவச மடிக்கணினி திட்டத்திற்காக ரூ.966.46 கோடி ஒதுக்கீடு. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் – பட்ஜெட்டில் அறிவிப்பு.
கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை, 1 கோடியில் இருந்து, 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி, 60 லட்சம் ரூபாயிலிருந்து, 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவப்படும்.நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில் முனைவோருக்கு மூலதன மானியம் ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக அதிகரிப்பு. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,364 நீர்ப்பாசன பணிகள் ரூ.500 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். காவல்துறைக்கு, 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு, அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு.
தமிழக பட்ஜெட் 2020-21: ராமநாதபுரம் மற்றும் விழுப்புரத்தில் ரூ.3,041 கோடி ரூபாய் செலவில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்.
➤ கல்வித்துறைக்கு ரூ.31,181 கோடி.
➤ தமிழக அரசின் கடன் ரூ. 4.56 லட்சம் கோடி.
➤ 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவ ரூ.1,200 கோடி ஒதுக்கீடு.
➤ நிர்பயா திட்டம் – ரூ.71 கோடி
➤ உணவு மானியம் – ரூ.6,500 கோடி
➤ பள்ளி கல்வித்துறை -ரூ.34,181 கோடி
➤ உயர்கல்வித்துறை -ரூ.5,052,84 கோடி
➤ மின்சார துறை- ரூ. 20,115.58 கோடி
➤ மருத்துவ கல்லூரி நிறுவ – 1200 கோடி
➤ சுகாதாரத்துறை – ரூ.15,863 கோடி
➤ தமிழ் வளர்ச்சி துறை -ரூ.74.08 கோடி
➤ தொல்லியல் துறை – ரூ.31.93 கோடி
➤ போக்குவரத்து துறை- ரூ.2716.26 கோடி
➤ பேரிடர் மேலாண்மை -1360 கோடி
➤ சிறைசாலைததுறை- 392 கோடி
➤ எரிசக்தி துறை – 20,115.58 கோடி
➤ கீழடி அகல் வைப்பகம் அமைக்க- ரூ.12.21 கோடி
➤ அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த -100 கோடி
➤ நெடுஞ்சாலை துறை- ரூ.15,850 கோடி
➤ ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5306.95 கோடி
➤ பயிர்க்கடன் – ரூ.11 ஆயிரம் கோடி
➤ கால்நடை வளர்ப்பு-ரூ.199 கோடி
➤ வேளாண்மை துறை -11,894 கோடி
➤ அம்ரூத் திட்டம் ரூ.1450 கோடி
➤ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை – ரூ. 18,540 கோடி.
➤ தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ காவல்துறைக்கு – 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ நீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ உணவுத்துறைக்கு 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ மீன்வளத்துறைக்கு 1,229 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக 18,540 கோடி ஒதுக்கீடு.
➤ பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ உயர் கல்வித்துறை – 5,052 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ சுகாதாரத்துறை – 15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு
➤ தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
➤ தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
➤ தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.