அடிதூள்…வெங்காயம் இப்போது 40 ரூபாய்…!!
அடிதூள்… 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம் இப்போது 40 ரூபாய்…!! நிம்மது பெருமூச்சுவிடும் குடும்ப தலைவிகள்…!!
கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது அதன் விலை அதிரடியாக சரிந்துள்ளது . குறிப்பாக சாம்பார் வெங்காயத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது . வெங்காயம் அதிகமாக உற்பத்தியாகும் கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக மழைப்பொழிவு காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது . இதனால் அதன் வரத்து குறைந்து வெங்காயத்தின் விலை பன்மடங்கு உயர்ந்தது.
ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்று வந்த நிலையில், ஒரு கட்டத்தில் திடீர்ன அதன் விலை 200 ரூபாய் வரை உயர்ந்தது. வெங்காய பிரச்சினை நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது . இதனால் வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு குறைந்த விலைக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு வினியோகம் செய்தது . குறிப்பாக தமிழகத்தில் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் மக்களுக்கு ஓரளவில் குறைந்த விலையில் வழங்கப்பட்டது . வெங்காயத்தின் திடீர் விலையேற்றம் பொது மக்களை வெகுவாக நெருக்கி வந்த நிலையில் , தற்போது அதன் பிரச்சினை ஒரளவுக்கு குறைந்துள்ளது என்றே சொல்லலாம் . சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த சாம்பார் வெங்காயத்தின் விலை தற்போது அதன் வரத்து அதிகரிப்பால் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது .
சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் அதன் விலை 200 ரூபாயிலிருந்து 100 ரூபாய்க்கு குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது, தற்போது ஏற்பட்டுள்ள நல்ல விளைச்சல் காரணமாகவும், தடையின்றி சீரான வரத்து காரணமாகவும், சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ 40 ரூபாயாக குறைந்துள்ளது . குறிப்பாக மகாராஷ்டிரா , கர்நாடகா , ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் .