முக்கிய செய்திகள் (20.11.2024)
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் நிர்வாக காரணங்களால் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி. கொல்கத்தா, பெங்களூரு, திருவனந்தபுரம், புவனேஸ்வர், சிலிகுரி விமானங்கள் ரத்து. அனைத்து விமானங்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்தவை என தகவல்.
காப்புரிமை பதிவு – தமிழ்நாடு முதலிடம். ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான காப்புரிமை பதிவில் 7,500 காப்புரிமைகளுடன் தமிழ்நாடு முதலிடம் – அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் எஸ். வின்சென்ட் தகவல். கண்டுபிடிப்புகளுக்கு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் காப்புரிமையை பெற்றுத் தருகிறது. காப்புரிமையை பதிவு செய்யும் மாநிலங்களில் முதலிடத்தில் தமிழ்நாடு, 2வது இடத்தில் மகாராஷ்டிரா. நடப்பாண்டில் காப்புரிமை பெற 16,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தகவல்.
டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லி அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பெயரை வீட்டிலிருந்து பணிபுரிய வைக்க டெல்லி அரசு உத்தரவு.
நகைக் கடன் வணிகத்தில் புதிய வசதியாக, இ.எம்.ஐ., திட்டத்தை அறிமுகம் செய்ய வங்கிகள், நகைக் கடன் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி, பெறப்படும் நகைக் கடனுக்கு வட்டியை மட்டும் கட்டாமல், குறிப்பிட்ட காலத்தை தேர்வு செய்து, வீடு, வாகனக் கடன் போல, அசலில், குறிப்பிட்ட தொகையையும் சேர்த்து, மாதத் தவணையில் கட்டலாம். இதனால், குறிப்பிட்ட ஆண்டுகளில், நகைக் கடன் அடைவதுடன், அசலைக் கட்ட முடியாமல், நகைகள் ஏலம் விடப்படுவது தவிர்க்கப்படும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கும் நன்மை ஏற்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு முதல் பல்வேறு இடங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மிதமான மழை பெய்துள்ளதால் இன்று (20.11.2024) பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் விருதுநகர். காரைக்கால் மாவட்டத்தில் கன மழை காரணமாக இன்று (20.11.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியர் மணிகண்டன்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. பரபரப்பான அரையிறுதிப் போட்டியில் ஜப்பானை 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியது.