வைகோ கேள்வி…..

 வைகோ கேள்வி…..

மறக்க வேண்டிய நிகழ்வுகளை ரஜினிகாந்த் நினைவூட்டியது ஏன்?

  மறக்க வேண்டிய நிகழ்வுகளை ரஜினிகாந்த் நினைவூட்டியது ஏன்? மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 

   இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், சமூக நீதிக்காகப் போராடி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்தவர் பெரியார். பெண்ணடிமைக் கோட்பாட்டை அழித்து மகளிர் விடுதலையைச் சாதித்தவர் பெரியார். அந்திமக் காலம் நெருங்கிய நிலையிலும், சென்னை தியாகராய நகரில் டிசம்பர் 19, 1973 இல் ஆற்றிய இறுதிப் பேருரையில் தமிழின விடுதலைக்காக தில்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர முழக்கமிட்டவர் பெரியார்.

  தமிழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வியலுடன் இரண்டறக் கலந்து இருக்கின்ற தலைவர் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் விழாவில் கூறிய கருத்துகளை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆதாரபூர்வமாக மறுத்து இருக்கின்றார். அதன் பிறகும் தாம் தெரிவித்த செய்திக்காக வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறி இருக்கும் ரஜினிகாந்த், “இவை மறக்கக் கூடிய நிகழ்வுகள்” என்று மட்டும் கூறுகிறார்.

  மறக்க வேண்டிய நிகழ்வுகளை ஏன் இவர் இப்போது நினைவூட்டுகிறார்? என்ற கேள்வி எழுகிறது! பெரியார் குறித்து அவதூறாகக் கருத்துக் கூறும் எண்ணம் தனக்கு இல்லை என்றுகூட ரஜினிகாந்த் கூற மறுப்பது எதனால்? எய்தவர்கள் யார்? என்று தமிழ்நாட்டு மக்கள் நினைப்பது இயற்கையே தொடங்கி வைத்தது ரஜினிகாந்த்; அவரேதான் இதற்கு முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்”. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...