சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில் தண்ணீர் இல்லை..!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில், பாதி கூட தண்ணீர் நிரம்ப வில்லை என்கின்றனர் அதிகாரிகள்.
சென்னைக்கு குடிநீர் வழங்க முக்கிய நீர் ஆதாரமான பூண்டி நீர்த்தேக்கம், கொற்றலை ஆற்றின் நடுவில் அமைக்கப் பட்டுள்ளது. இதன் மொத்த கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடி; பரப்பளவு, 121 ச.கி.மீட்டர். மழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால், நீர்த்தேக்கம் நிரம்பினால், பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் என, இரண்டு கால்வாய்கள் மூலம், சோழவரம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது தண்ணீர் இருப்பு 45 சதவீதமாக உள்ளது. பூண்டி, ரெட்ஹில்ஸ், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, வீராணம் ஆகிய நீர்த்தேக்கங்களில் மொத்தம் 6 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவை விட, பாதி அளவுக்கும் குறைவானது.
கிருஷ்ணா நீர் பூண்டிக்கு வினாடிக்கு 100 கனஅடி (கனஅடி) வந்து கொண்டிருக்கிறது. கனமழையால் ஆந்திரா மற்றும் திருத்தணியில் உள்ள குளங்கள் நிரம்பினால், பூண்டிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.
நீர்தேக்கம்- மொத்த கொள்ளளவு (மி.க.அடி) – கொள்திறனுக்கான சதவீதம்
பூண்டி- 468/ 3,231- 14.5 % (நீர் இருப்பு)
செங்குன்றம்- 2378/ 3,300- 72.1% (நீர் இருப்பு)
சோழவரம்- 102/1081- 9.4% (நீர் இருப்பு)
செம்பரம்பாக்கம்- 1790/3645- 49.1% (நீர் இருப்பு)
தேர்வோய் கண்டிகை- 304/500- 60.8% (நீர் இருப்பு)