சுங்கச்சாவடிகளில் அடாவடி வசூல் துவக்கம்.
பாஸ்டேக் இல்லாவிடில் இரட்டிப்பு கட்டணம்: சுங்கச்சாவடிகளில் அடாவடி வசூல் துவக்கம்.
இந்தியா முழுவதும் நேற்று (ஜன.17) இரவு முதல் நான்கு வழிச்சாலைகளில் பாஸ்டேக் பதிவு செய்யாதவர்களுக்கு இருமடங்கு கட்டண வசூல் முறை அமலுக்கு வந்தது.இந்தியா முழுவதும் நான்குவழிச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் ஆவதால் பாஸ்டேக் என்னும் ஆன்லைன் முறை அமலுக்கு வந்தது. ஏற்கனவே டிசம்பர் 15 வரை வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் ஜன.,15 உடன் முடிவுக்கு வந்தது. நேற்று 17ம் தேதி இரவு முதல் பாஸ்டேக் மட்டுமே அமலில் உள்ளது.
அதேநேரத்தில், பாஸ்டேக்கிற்கு பதில், பணம் செலுத்தும் கவுண்டர்களில் வழக்கமான கட்டணத்தை போல இருமடங்கு கட்டணம் வசூலித்தனர். குறிப்பாக, வாடகை காருக்கு ஒரு முறை கடந்து செல்ல 45 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 90 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. ரிடர்ன் வர 135 ரூபாய் வசூலிக்கப்பட்ட கட்டணம் 270 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நாங்குநேரி சுங்கச்சாவடியில் இந்த அதிரடி கட்டண வசூல் நடக்கிறது. ஆனால் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய தென்மண்டல அதிகாரி பவன்குமாரிடம் கேட்டபோது, அப்படியா..இருக்காதே என மறுத்தார். இரட்டிப்பு கட்டண வசூல் குறித்து அதிகாரிகளுக்கே தெரியவில்லை.நாங்குநேரி சுங்கச்சாவடியில் கழிப்பறை கூட கிடையாது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு ஓட்டலோ, வாகன ஓட்டிகள் ஓய்வு எடுத்துச்செல்லவோ எந்த அடிப்படை வசதியும் செய்துதரப்படாமல் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக உடைந்த பெயர் பலகைகள் இன்னமும் சரிசெய்யப்படவில்லை. விபத்துச்சாலைகள் இன்னமும் சீர்செய்யப்படவில்லை. பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை முழுமையாக அமைக்கப்படாமல் மழைக்கும் வெயிலுக்கு காயவேண்டியுள்ளது. எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்வதற்கு வாகனஓட்டிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.