விரைவுச்செய்திகள்
குரூப் 4 முறைகேடு புகார் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவு குறித்து டிஎன்பிஎஸ்சி நாளை மறுநாள் ஆலோசனை.டிஎன்பிஎஸ்சி செயலர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர். ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவு குறித்த அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகும் என தகவல்.
நிர்பயா குற்றவாளிகளை பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட புதிய உத்தரவு. ஜனவரி 22ம் தேதி தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம். டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு.
முரசொலி நாளிதழை வைத்திருந்தால் தமிழன், திராவிட இயக்கத் தமிழன், மனிதன் என பொருள் – முரசொலி பதில்.முரசொலி வைத்திருந்தால் சாதி, மத பேதம் பார்க்காதவன், ஆண்டான்-அடிமைக்கு எதிரானவன் என பொருள் – ரஜினிக்கு முரசொலி நாளிதழ் பதிலடி.
ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பான்களுக்கு, 2 மாதத்திற்குள் தடைவிதிக்க வேண்டும்.-மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.
2 ஆண்டுகளுக்கு பிறகு களத்திற்கு திரும்பி, முதல் தொடரிலேயே பட்டம் வென்ற சானியா மிர்சா. ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி சானியா மிர்சா – உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்ம் வென்றது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீதான விவாதம், அமெரிக்க செனட் சபையில் துவங்கியது . அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட, அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.