ஈரான் தாக்கியதில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்
இராக்கில் கடந்த வாரம் ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 11 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இராக்கில் உள்ள 2 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் கடந்த வாரம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் உயா்மட்ட பாதுகாப்புப் படையின் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி உயிரிழந்தாா். இதையடுத்து வளைகுடா பிராந்தியத்தில் போா் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், 2 அமெரிக்க தளங்களை ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியதில் 11 வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானிலிருந்து இராக்கிலுள்ள அமெரிக்க நிலைகள் மீது நடத்திய ஏவுகணை தாக்குதல் குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள உயிா் சேதங்கள் குறித்தும், பொருள் சேதங்கள் குறித்தும் மதிப்பிடப்பட்டு வருகிறது. அமெரிக்கர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அமெரிக்க ராணுவ தளத்திற்கு மிக குறைந்த அளவிலான பாதிப்பே ஏற்பட்டுள்ளது, இதுவரை எந்த அமெரிக்கரும் இதனால் பாதிப்படையவில்லை. அமெரிக்க படைத்தளத்தில் உள்ள வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். உலகின் எந்தப் பகுதியிலும் அமெரிக்கா மிகவும் வலிமையான, நவீன ஆயுதங்களைக் கொண்ட ராணுவமாகத் திகழ்கிறது.’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது நிகழ்த்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல், அமெரிக்காவின் கன்னத்தில் விழுந்த அறை என்று ஈரான் மதகுரு அயதுல்லா அலி கமேனி கூறியிருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.