இன்றைய முக்கிய செய்திகள்
புகை மூட்டம், பனி காரணமாக சென்னையில் இருந்து மைசூரு செல்லும் ட்ரூ ஜெட், ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்.
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.
மதுரையில் உள்ள பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என மிரட்டல்.சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து மதுரை போலீசார் உஷார். மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகிறார். பிப்ரவரி மாத இறுதியில் டிரம்ப் இந்தியா வருவதாக தகவல். கடந்த 7ம் தேதி தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, டிரம்புக்கு அழைப்பு. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று டிரம்ப் இந்தியா வருகிறார்.
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மைக்கேல் பத்ரா நியமனம்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத் தொகை பெறாத 3.91 லட்சம் பேருக்கு வரும் 21-ம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் – தமிழக அரசு.
சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை செய்யப்பட்ட சம்பவம்.குற்றவாளிகள் எனத் தேடப்பட்ட தௌபிக், அப்துல் சமீம் ஆகியோர் கைது.களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார் எஸ்.ஐ.வில்சன்.போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் குற்றவாளிகள் கைது. கர்நாடக மாநிலத்தில் குற்றவாளிகள் பிடிபட்டதாக முதல்கட்ட தகவல்.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ரூ.6,608 கோடி மதிப்பிலான, 15 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி. முதல்வர் பழனிசாமி தலைமையிலான உயர்மட்டக் குழு கூட்டத்தில் தொழில் திட்டங்களுக்கு அனுமதி. தொழில் திட்டங்கள் மூலம், 6,673 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் – தமிழக அரசு.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் வரும் 27ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.