இனி எந்த ஏடிஎம்ல வேணாலும் பணம் போடலாம்!

மக்களின் அன்றாடப் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாக ஊக்கவிக்கப்பட்டு வருகின்றன. ரொக்கப் பணப்புழக்கத்தைச் சீராக்க புதிய ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்படுகின்றன. அதேபோல, வங்கிகளில் வரிசையில் காத்துக்கிடப்பதைத் தவிர்க்க ஏடிஎம்களில் பணப் பரிவர்த்தனைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஏடிஎம் எந்திரங்களிலேயே பணம் டெபாசிட் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

பணம் டெபாசிட் வசதி இருந்தாலும் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்குப் பணம் அனுப்பும் வசதி பரவலாக இல்லை. சம்பந்தப்பட்ட வங்கியின் வேறொரு வங்கிக் கணக்குக்கோ அல்லது அந்த ஏடிஎம் எந்த வங்கியைச் சார்ந்ததோ அந்த வங்கியின் மற்றொரு வங்கிக் கணக்குக்கோ மட்டுமே பணம் அனுப்ப இயலும். ஒருசில வங்கிகளில் மற்ற வங்கிக் கணக்குக்குப் பண அனுப்பும் எந்திரங்கள் இருந்தாலும் அது நாடு முழுவதும் இன்னும் அமலுக்கு வரவில்லை. இந்நிலையில், விரைவில் அனைத்து ஏடிஎம் எந்திரங்களிலும் மற்ற வங்கிகளைச் சேர்ந்த வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பும் வசதி ஏற்படுத்தும் வசதி வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய நிலையில் 14 வங்கிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மற்ற வங்கிகளிலும் இந்த வசதியைக் கொண்டுவருவதில் பெரிய சிரமம் இருக்காது என்று வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன. சுமார் 30,000 ஏடிஎம்களில் இந்த வசதி வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏடிஎம் எந்திரத்தின் பாகங்களைப் பெரிதாக மாற்றாமல் மென்பொருள் மூலமாகவே இந்த வசதியைக் கொண்டுவரும் பணியில் இந்திய தேசியக் கொடுப்பனவு நிறுவனம் (NPCI) ஈடுபட்டுள்ளது. இவ்வாறான பரிவர்த்தனைகளில் ரூ.10,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாயும், ரூ.10,00க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்படுவது குறித்த அச்சமும் வங்கிகளிடையே நிலவுவதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!