மாலை நேர செய்திகள்
பெங்களூருவில் கைதான முகமது ஹனீப்கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய 3 பேரையும், 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கியூ பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கியது எழும்பூர் நீதிமன்றம். பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததாக காவல்துறை குற்றச்சாட்டு
2ம் வகுப்பு மாணவரை மனிதக்கழிவு அள்ள வைத்ததாக ஆசிரியைக்கு, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு.கடந்த 2015ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு.
உள்ளாட்சி தேர்தல் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல், நாளை நடைபெறுகிறது. தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்பதாக தேர்தல் ஆணையம் பதில்.
கூட்டுறவு சங்க தேர்தல் பிப்ரவரி 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1028 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 11,368 பதவிகளுக்கு பிப்ரவரி 3ம் தேதி தேர்தல் நடைபெறும் என கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 4ம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜனவரி 27ம் தேதி தொடங்கி மனுக்கள் மீதான பரிசீலனை 28ம் தேதி நடைபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக, 310 இணைப்பு பேருந்துகள் இயக்கம்.இணைப்பு பேருந்துகள் வரும் 12ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படும் – சென்னை போக்குவரத்து கழகம்.
இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன்.நெல்லை மாவட்ட நீதிமன்றம் வழங்கியது, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டதாக வழக்கு.