இன்றைய முக்கிய செய்திகள்

பேரவையில் இன்று: மீன் அதிகம் சாப்பிட்டால்  மாரடைப்பு, புற்றுநோய்,  கன்பார்வை கோளாறு  உள்ளிட்ட எந்த பிரச்சனையும் வராது – அமைச்சர் ஜெயக்குமார். இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.தடயவியல் ஆய்வகங்கள் அமைத்து அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு.அனைத்து மாநில அரசுகளுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவு.

மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை, சவரனுக்கு 528 உயர்ந்து 31,432க்கு விற்பனை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1,552 உயர்ந்துள்ளது தங்கத்தின் விலை.

சென்னையில்
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்கள் கைது. 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேருந்தில் ஏற்ற முயன்ற போது தள்ளுமுள்ளு.போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம், பரபரப்பு.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு.உயர்நீதிமன்றங்களில் இது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை. வெள்ளிக்கிழமை வழக்கு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘ஆல் இஸ் வெல்’ என பதிவு! ஈராக்கில் உள்ள 2 அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது – அமெரிக்க அதிபர் டிரம்ப். தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் சேதம் குறித்து நாளை அறிக்கை வெளியிடப்படும் – டிரம்ப்.

பாக்தாத்: அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து, 9 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்.ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில், அமெரிக்க பயணிகள் விமானங்கள் பறக்க தடை.

அமெரிக்க படைகள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை, 3.5% அதிகரிப்பு!.

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் கூட்ட நெரிசல் காரணமாக, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து, 6 இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

2019 – 20ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும். 2018-19ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது – மத்திய அரசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!