:நிர்பயா வழக்கு ..! குற்றவாளி 4 பேருக்கு தூக்கு

 :நிர்பயா வழக்கு ..! குற்றவாளி 4 பேருக்கு தூக்கு
நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீண்ட நாட்களாக தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது.

குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.


பின்னர் இந்த வழக்கில் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.எனவே தண்டனையை நிறைவேற்றக்கோரி நிர்பயா பெற்றோர்களின் சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு மீது இன்று நடைபெற்ற விசாரணையில் , நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 22ஆம் தேதி ஜனவரி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...