இன்றைய முக்கிய செய்திகள்

 இன்றைய முக்கிய செய்திகள்
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 62 யானைகளுக்கு, 48 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

ராஜஸ்தான்: கோட்டா அரசு மருத்துவமனையில் பலியான பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு! கடந்த 1 மாதத்தில் மட்டும் ராஜஸ்தான் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 263 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்!.

ராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கினால் முழு அமைப்பும் பின்னோக்கிச் சென்றுவிடும்.விமான கொள்முதலில் 10 ஆண்டு தாமதத்தால் ரஃபேலுக்கு பதில் மிக்-21இல் அபிநந்தன் பறக்க நேரிட்டது- விமானப்படை முன்னாள் தளபதி தனோவா.

நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை; ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது!.

பாஜகவின் தமிழக தலைவர் நியமனம் குறித்து சென்னை பாஜக தலைமையகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம். பாஜகவின் மேலிட பிரதிநிதிகள் சிவபிரகாஷ், நரசிம்மராவ் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக தலைவராக, ராமநாதபுரத்தை சேர்ந்த து.குப்புராமு என்பவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்.

1986 முதல் 2006 வரை பட்டினம்காத்தான் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜக துணைத் தலைவராகவும் பின் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்தவர் குப்புராமு.மாணவர்களுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் மூலம், நீட் பயிற்சி அளிக்க நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்.

நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம், இன்று இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது.

இமாச்சல பிரதேசம்: சிம்லா அருகே நிலஅதிர்வு – ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு.

பள்ளிக் கல்வித்துறைக்கு எதிரான வழக்குகளை எதிர்கொள்ள, பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடு

மும்பை பங்குச்சந்தை, 357 புள்ளிகள் குறைந்து 40,987 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

தங்கம் சவரனுக்கு ரூ.512 அதிகரித்து, ரூ.31,168க்கு விற்பனை.

ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிப்பு – ஸ்டாலின்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., திமுகவுடன் கை கோர்த்ததால் பரபரப்பு. பூந்தமல்லி ஒன்றியத்தில், பாமக ஒன்றிய கவுன்சிலர், அதிமுகவினருடன் பதவி ஏற்பார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென திமுக கவுன்சிலர்களுடன் கை கோர்ப்பு.

அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் அன்பழகன் ஆலோசனை.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

குரூப்-4 தேர்வில் முறைகேடு என்ற புகார் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட்டு விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும். குற்றச்சாட்டு தொடர்பாக ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படுகிறது; தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: டிஎன்பிஎஸ்சி.

2017ல் நடந்த குரூப் 2A தேர்வில் முறைகேடா? முதல் 30 இடங்களை பிடித்தவர்கள் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என தகவல் முறைகேடு புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி விசாரணை, வெளிமாவட்ட தேர்வர்கள் எத்தனை பேர், ராமநாதபுரத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர் என்பது குறித்து ஆய்வு. வெற்றி பெற்ற தேர்வர்களின் விடைத்தாள்கள் சரிபார்ப்பு – டிஎன்பிஎஸ்சி.

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும், 9ம் தேதி வரை நடைபெறுகிறது.சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும். 9ம் தேதி இரண்டாவது துணை நிலை அறிக்கை, முதலமைச்சர் பதிலுரை நடைபெறும் – சபாநாயகர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...