முக்கிய செய்திகள்
இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம்.நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096 கோடி பெறப்பட்டுள்ளது.மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியின் அளவு குறைந்துள்ளது. திறமையான நிதி மேலாண்மைக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது – ஆளுநர்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அளிப்பதில் தனியார் பள்ளிகள் விதிமீறலா?முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவு. 200க்கும் அதிகமான பள்ளிகள் தற்போது வரை மாணவர்களின் விவரங்களை அளிக்கவில்லை என குற்றச்சாட்டு.மாணவர்களின் விவரங்களை அளிக்க 8ம் தேதி கடைசி நாள் என தேர்வுத்துறை அறிவிப்பு.சரியாக படிக்காத மாணவர்களை தனித்தேர்வு மாணவர்களாக எழுத வைப்பதற்கு தனியார் பள்ளிகள் முயற்சி என புகார்.பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்தால், 100% தேர்ச்சி என்ற பெருமை போய்விடும் என்பதால் விதிமீறல் என குற்றச்சாட்டு.