ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு. இன்று மாலை 5 மணி முதல் 27ம் தேதி மாலை வரை மதுக்கடைகளை மூட உத்தரவு.
பிரபல இசைக் கச்சேரி குழு உரிமையாளர் தற்கொலை. சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த பிரபல இசைக் கச்சேரி லஷ்மன் சுருதி குழுவின் உரிமையாளர் ராமன் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.
நாகை கீழவெண்மணியில், 44 பேர் எரித்துக்கொல்லப்பட்டதன் 51ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவுச்சின்னத்தில் மரியாதை. மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் செங்கொடியை ஏற்றி மரியாதை.
நீட் போட்டி தேர்வுக்கு தமிழகத்தில் இதுவரை 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்: விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள்.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு, ரூ.264 அதிகரித்து, ரூ.29,584க்கு விற்பனை.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று இரவு 11 மணி முதல் நாளை பகல் 12 மணி வரை அடைக்கப்படுகிறது: நாளை பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் – தேவஸ்தானம் அறிவிப்பு.
