திடீரென வீழ்ச்சி அடைந்த வெங்காயம் விலை: பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி
திடீரென வீழ்ச்சி அடைந்த வெங்காயம் விலை: பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி
வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக விலை ஏறிக்கொண்டே இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
மலிவு விலையில் வெங்காயம் தரும் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெங்காயத்தின் விலை இன்னும் அதிகமாக விலை ஏறும் என்றும் 300 ரூபாயை தொடும் வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் கூறி வந்த நிலையில் தற்போது திடீரென ரூபாய் 40 முதல் 60 வரை இன்று ஒரே நாளில் வெங்காயம் விலை இறங்கியுள்ளது.
பொது மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது ஆனால் அதே நேரத்தில் வெங்காய விலை ஏறும் என்று வெங்காயத்தை பதுக்கி வைத்த பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். வெங்காயத்தின் விலை ஒரே நாளில் வீழ்ச்சியடைய எகிப்திலிருந்து பல ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதே காரணமாக கூறப்படுகிறது.
வெங்காய விலை இறங்கி வருவதை அடுத்து பதுக்கல்காரர்கள் தாங்கள் பதுக்கிய வெங்காயங்களை தற்போது மார்க்கெட்டுக்குக் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். இதனால் வெங்காயத்தின் வரவு அதிகரித்துள்ளதால் மேலும் விலை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது