வரலாற்றில் இன்று – 07.12.2019 – சோ ராமசாமி
இன்று சோ ராமசாமி நினைவு தினம்..!!
பிரபல பத்திரிக்கையாளரான சோ ராமசாமி 1934ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி சென்னையிலுள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவர் 1957ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
இவர் தேன்மொழியாள் என்ற நாடகத்தில் சோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது. துக்ளக் வார இதழை 1970ஆம் ஆண்டும், பிக்விக் என்ற ஆங்கில இதழை 1976ஆம் ஆண்டும் தொடங்கினார். இவரது இந்து மகா சமுத்திரம் நூல் 6 தொகுதிகளாக வெளிவந்தது.
இவர் மாநிலங்களவை உறுப்பினராக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். கோயங்கா விருது, நசிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
பத்திரிக்கையாளர், நாடக ஆசிரியர், நடிகர் என பன்முகப் பரிமாணம் கொண்ட சோ ராமசாமி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி மறைந்தார்.