UBER பற்றிய சில சுவாரஸ்யங்கள்…
UBER பற்றிய சில சுவாரஸ்யங்கள்…
ஊபர் (Uber) நிறுவனம் உலகின் வாடகை மோட்டார் வண்டித் துறையை (Taxi Industry) தற்போது தனது கைக்குள் வைத்திருக்கின்றது என்றால் மிகையாகாது.
ட்ராவிஸ் கலனிக் மற்றும் கரேட் காம்ப் எனும் இரு நபர்களால் 2009-ம் ஆண்டு ஊபர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
சொந்தமாக ஓரு வண்டி கூட இல்லாமல் இன்று உலகின் மிகப் பெரிய டாக்ஸி நிறுவனமாக வளர்ந்துள்ளது என்று சொல்லும் அளவிற்கு ஊபரின் இமாலய வெற்றி உள்ளது.
இது வரை 700-க்கும் மேற்பட்ட நகரங்களிலும் 63 நாடுகளிலும் உலகம் முழுவதும் வியாபித்திருக்கின்றது.
ஊபரின் வெற்றிக்கு வழிவகுத்த சில முக்கிய செயல் திட்டங்கள்
பயணிகளுக்கு
அனைவரும் பயன்படுத்தும் வகையில் இலகு பயன்பாடு கொண்ட ஸ்மார்போன் செயலிகள்.
டாக்ஸிக்காக காத்திருக்கும் நேரம் வெகுவாகக் குறைவு.
ஆன்லைன் கட்டண வசதி
மற்ற நிறுவனங்களை விட குறைவான கட்டணம்.
டாக்ஸியையும் அதன் வழித்தடத்தையும் நிகழ்நிலையில் நேரடி கண்காணிப்பு.
ஓட்டுநர்களுக்கு
மேலும் பணமீட்டுவதற்கான ஓர் வழியாக இருந்தது.
தங்களின் நேரத்திற்கு தகுந்தாற் போல் வேலை பார்க்கக்கூடியதாக இருந்தது.
ஊபர் பயன்படுத்தும் மேப் (Map) நாம் அன்றாடம் பயன்படுத்தும் அதே கூகிள் மேப் தான். கடந்த 2016 -2018 வரையிலான இரண்டு வருட காலப்பகுதியில் மட்டும் ஊபர் 50 மில்லியன் டாலர் பணம் கூகிள் மேப்பிற்காக கூகிளுக்கு செலுத்தியுள்ளது.
ஊபரின் தனித்து சேவை
ஊபருக்கு டாக்ஸியில் பயணிப்பவர்களும் டாக்ஸி ஓட்டுநர்களுமே வாடிக்கையாளர்கள்.
பயணிகளுக்கு காத்திருப்பு நேரத்தை குறைத்து சிறந்த ஓட்டுநர்களை வழங்குகின்றது.
ஓட்டுநர்களுக்கு மேலதிக வருவாயை ஏற்படுத்தி வேலை நேரத்தை நெகிழ்வுத் தன்மை உள்ளதாகவும் வழங்குகின்றது.
உங்கள் ஊரில் Share Auto-வில் பயணித்திருப்பீர்கள். ஊபரும் அதே சேவையையும் தருகின்றது.
எப்படி இலாபம் ஈட்டுகின்றது
ஊபரின் முதன்மையான வருவாய் டாக்ஸி கட்டணமாக பயணிகளிடமிருந்து பெறப்படும் பணம் ஆகும்.
பயணிகளிடம் பெறப்படும் பணத்தில் 20% ஊபர் பெற்றுக்கொண்டு மிகுதி 80% ஓட்டுநர்களிற்கு வழங்குகின்றது.
பயணிகளின் தேவைக்கேற்ப கார்களை தெரிவு செய்ய முடியும். அதற்கேற்றவாறு கட்டணங்களும் வசூலிக்கப்படும்.
கட்டண அதிகரிப்பு/ மாற்றங்கள்
ஊபர் தனது பயணக்கட்டணங்களை தூரத்திற்கும், நேரத்திற்கும், கார்களின் வகைகளுக்குமேற்ப அமைத்திருந்தாலும் பண்டிகைக் காலங்களிலும், அதிகாலையிலும், நள்ளிரவு நேரங்களிலும் அதிகரிக்கின்றது.
இதன் மூலம் அந்த நேரங்களில் ஓட்டுநர்களை அதிகரிக்கலாம் (கட்டண அதிகரிப்பை பார்த்து ஓட்டுநர்கள் தாமாகவே முன் வந்து பயணிகளின் பயணத்தேவைகளை பூர்த்தி செய்வர்)
அதே நேரத்தில் பயணத்தேவைகளை தேவைகள் அதிகரிக்கும் போது கட்டணத்தை அதிகரிப்பதால் வருமானமும் அதிகரிக்கின்றது.
ஊபர் 91 மில்லியன் மாதாந்த பயனர்களையும் 3.9 மில்லியன் ஓட்டுநர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 14 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
இதுவரை ஊபர் 10 பில்லியன் பயணங்களை பூர்த்தி செய்துள்ளது.
ஊபரின் மொத்த சொத்து மதிப்பு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
2018ம் ஆண்டுக்கான நிகர வருமானம் 11.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஊபர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
ஊபரில் பயணங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது Toyota வகை வாகனங்கள்.
ஊபரில் 14% பெண் ஓட்டுநர்களே.
ஆஸ்திரேலியர்கள் சுற்றுலா செல்லும் நாடுகளில் கூட ஊபரை பயன்படுத்துகின்றார்கள்.
கடந்த 2017ம் ஆண்டில் 80 நாடுகளில் 614 நகரங்களில் ஊபரை பயன்படுத்தியுள்ளனர்.
இதுவரை ஊபரில் மேற்கொள்ப்பட்ட அதிகூடிய பயணத்தூரம் 2,256 மைல்கள். Mr.Beast எனும் புகழ் பெற்ற யூடியூபரால் அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினாவில் இருந்து கலிபோர்னியா வரை பயணம் மேற்கொள்ளப்பட்டது…