முக்கிய செய்திகள்
ஒடிசாவின் பாலசோர் தீவில் நடைபெற்ற பிரித்வி ஏவுகணை சோதனை வெற்றி. இரவு நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது பிரித்வி ஏவுகணை.
பெங்களூரு: கேபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகாரில், கர்நாடக கிரிக்கெட் கமிட்டி உறுப்பினர் சுதேந்திர ஷிண்டே கைது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 அதிகரித்து, ரூ.29,320க்கு விற்பனை.
சுவர் இடிந்து 17 உயிரிழந்த விவகாரம்: வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் மீது போடப்பட்ட வழக்கில் மாற்றம். 304 (a) (அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல்) என்ற பிரிவை மாற்றி, 304 (ii) (கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல்) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் ஊடகங்களுக்கு நேர்காணல்கள் வழங்கவோ அல்லது அறிக்கைகளை வெளியிடவோ கூடாது. ப.சிதம்பரம் சாட்சியங்களை நிர்பந்திக்க கூடாது, சாட்சிகளை பாதிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மனு. தேர்தல் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் -உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
நேபாளத்தில் நடைபெற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், 100மீ ஓட்ட பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் வென்று அசத்தினார்.
நேபாளத்தில் நடைபெற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், 100மீ ஓட்ட பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் வென்று அசத்தினார்.
காஷ்மீர்: குப்வாரா பகுதியில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 3 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக தகவல்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இடையே மோதல். ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில், 6 பேர் பலி என எஸ்.பி. மோகித் கார்க் தகவல்.
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் எஸ்.சி. – எஸ்.டி. பிரிவினருக்கான தொகுதி ஒதுக்கீடு, 10 ஆண்டுகள் நீட்டிப்பு. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.