முக்கிய செய்திகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம். சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் – வானிலை மையம்.
ஏர்டெல், வோடபோன் கட்டணம் 40% உயர்வு: இன்று முதல் அமல்! ஏர்-டெல், வோடோபோன் – ஐடியா ஆகிய 2 நிறுவனங்களின் செல்போன் கட்டணம், 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த புதிய கட்டணம், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கோவை மேட்டுப்பாளையத்தில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும், 25க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு.
சேலம் – சென்னை 8 வழிச்சாலை வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம். மத்திய அரசு சார்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யாததால் நாளை மறுநாளுக்கு வழக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை. நிலம் கையகப்படுத்துவதில் முறைகேடு எனக்கூறி உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து மேல்முறையீடு திட்ட அதிகாரி தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் ரமணா தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்கிறது.
பொங்கல்பரிசு தொகுப்புக்கு தேவையான அனைத்து பொருட்களையும், ஒரு வாரத்திற்குள் கொள்முதல் செய்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏதுவாக தயார் நிலையில் வைக்க வேண்டும் – நியாய விலை கடைகளுக்கு உணவுத்துறை அறிவுறுத்தல்.
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளியில் லாரி – கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு
நீட் தேர்வு: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கட்டணம் ரூ.700லிருந்து ரூ.800ஆக அதிகரிப்பு.