வரலாற்றில் இன்று – 12.12.2019
ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட். ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நண்பரின் உதவியால் ‘சென்னை திரைப்படக் கல்லூரியில்’ சேர்ந்தார். 1975ஆம் ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.
ரஜினிகாந்த் அவர்கள், தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழக அரசு திரைப்பட விருது, கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, பத்ம பூஷண், வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.