விரைவு செய்திகள்

வைகோ கைது: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதை எதிர்த்து டெல்லியில் போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது.

மதுரவாயல் – 
வாலாஜாபாத் வரை உள்ள சுங்கச்சாவடிகளில் ஏன் 50 சதவீத கட்டணம் மட்டும் ஏன் வசூலிக்கக் கூடாது? – உயர்நீதிமன்றம். சாலை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி. டிச – 9ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

கோவையில் வெளிநாட்டு நிறுவனத்தோடு 26 ஆண்டு காலம் போடப்பட்ட குடிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது, உச்ச நீதிமன்றம். அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு. சிதம்பரத்தை சிறையில் வைத்திருப்பது ஏன் என மத்திய அரசு தரப்பு இன்று வாதிட்டது. கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நடவடிக்கை -மத்திய அரசு தரப்பு. சிபிஐ வழக்கில் மட்டுமே கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன், அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய நடவடிக்கை – மத்திய அரசு.

தமிழகத்தின், 36வது மாவட்டமாக ராணிப்பேட்டை உதயமானது – முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.உள்ளாட்சி தேர்தலில்
ஊரக பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு அரசிதழில் வெளியீடு.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மட்டுமே மின்னணு  இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவசர சட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
   

கோவா: 50வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று, இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் நடிகர் அரவிந்த் சாமிக்கு சிறப்பு சாதனையாளர் விருது வழங்கி மத்திய அரசு கவுரவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!