வரலாற்றில் இன்று ( 15.04.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 15 கிரிகோரியன் ஆண்டின் 105 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 106 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 260 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1395 – தைமூர் தங்க நாடோடிகளின் தலைவர் தோக்தமிசை தெரெக் ஆறு சமரில் தோற்கடித்தார். தங்க நாடோடிகளின் தலைநகர் சராய் தரைமட்டமாக்கப்பட்டது.
1450 – நூறாண்டுப் போர்: பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது.
1632 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் குஸ்தாவசு அடால்பசு தலைமையில் ரைன் என்ற இடத்தில் நடந்த சமரில் புனித உரோமைப் பேரரசைத் தோற்கடித்தது.
1736 – கோர்சிக்கா இராச்சியம் அமைக்கப்பட்டது.
1755 – சாமுவேல் ஜோன்சன் என்பவர் தனது ஆங்கில அகரமுதலியை வெளியிட்டார்.
1815 – சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் யாழ்ப்பாணத்தில் அறிமுகமானது. இது 12 பணத்திற்கு இணையானது.[1]
1817 – கேள்விக் குறைபாடுள்ளோருக்கான முதலாவது அமெரிக்கப் பாடசாலை ஹார்ட்பர்ட் நகரில் தொடங்கப்பட்டது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவில் கிளர்ச்சியைத் தடுப்பதற்காக 75,000 தன்னார்வலர்களைத் திரட்டுமாறு அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கேட்டுக் கொண்டார்.
1865 – ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்காவின் 17வது அரசுத் தலைவரானார்.
1892 – ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
1896 – முதலாவது ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் ஏதென்ஸ் நகரில் இடம்பெற்றது.
1900 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: பிலிப்பீனிய ஆயுதப் போராளிகள் அமெரிக்கப் படைகள் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்து, நான்கு நாட்கள் முற்றுகையில் வைத்திருந்தனர்.
1912 – இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிமலை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கியதில் மொத்தம் 2,227 பேரில் 710 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
1923 – இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது.
1936 – பாலத்தீனத்தில் அரபுக்களின் கிளர்ச்சி ஆரம்பமானது..
1940 – இரண்டாம் உலகப் போர்: நாட்சிகளினால் கைப்பற்றப்பட்டிருந்த நோர்வேயின் நார்விக் நகர் மீது கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின.
1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் 200 போர் விமானங்கள் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகர் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியில் நாட்சிகளின் பேர்கன்-பெல்சன் வதை முகாம் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டது.
1969 – வட கொரியா அமெரிக்கக் கடற்படை வானூர்தி ஒன்றை யப்பான் கடலில் சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 31 பேரும் கொல்லப்பட்டனர்.
1970 – கம்போடிய உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்ட வியட்நாமிய சிறுபான்மையினத்தவரின் 800 இற்கும் அதிகமான உடல்கள் தென் வியட்நாமின் மேக்கொன் ஆற்றில் மிதந்தன.
1976 – தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.
1986 – மேற்கு பெர்லினில் ஏப்ரல் 5-இல் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கப் படைவீரர் இறந்ததற்குப் பழி வாங்கும் முகமாக அதிபர் ரொனால்ட் ரேகன் உத்தரவின் பேரில் ஐக்கிய அமெரிக்கா லிபியாவில் குண்டுவீச்சை நிகழ்த்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – இங்கிலாந்தின் இல்சுபரோ காற்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 லிவர்பூல் ரசிகர்கள் இறந்தனர்.
1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கப் போராட்டங்கள் ஆரம்பமானது.
1997 – மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341 பேர் உயிரிழந்தனர்.
2002 – ஏர் சீனாவின் போயிங் விமானம் தென் கொரியாவில் வீழ்ந்ததில் 128 பேர் உயிரிழந்தனர்.
2013 – ஈராக்கில் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
2013 – அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் பாஸ்டன் மாரத்தான் நிகழ்வில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர். 264 பேர் காயமடைந்தனர்.
2014 – தெற்கு சூடானில் மத வழிபாட்டிடங்களிலும் மருத்துவமனைகளிலும் தஞ்சமடைந்திருந்த 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1452 – லியொனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர் (இ. 1519)
1469 – குரு நானக், 1வது சீக்கிய குரு (இ. 1539)
1563 – குரு அர்ஜன், 5வது சீக்கிய குரு (இ. 1606)
1707 – லியோனார்டு ஆய்லர், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1783)
1793 – பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ, செருமானிய வானியலாளர் (இ. 1864)
1858 – எமில் டேர்க்கேம், பிரான்சிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (இ. 1917)
1871 – சாக்கோட்டை கிருஷ்ணசாமி, இந்திய வரலாற்றாளர், திராவிடவியலாளர் (இ. 1947)
1874 – ஜொகன்னஸ் ஸ்டார்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1957)
1894 – நிக்கிட்டா குருசேவ், சோவியத் ஒன்றியத்தின் 7வது பிரதமர் (இ. 1971)
1907 – நிக்கோ டின்பெர்ஜென், நோபல் பரிசு பெற்ற டச்சு-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1988)
1915 – கா. கோவிந்தன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் (இ. 1991)
1920 – கிருஷ்ணா வைகுந்தவாசன், இலங்கைத் தமிழ் செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 2005)
1924 – ம. கனகரத்தினம், இலங்கை அரசியல்வாதி (இ. 1980)
1931 – தோமசு திரான்சிட்ரோமர், நோபல் பரிசு பெற்ற சுவீடியக் கவிஞர் (இ. 2015)
1940 – ஜெஃப்ரி ஆர்ச்சர், ஆங்கிலேய எழுத்தாளர், அரசியல்வாதி
1943 – இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரிவேதியியலாளர்
1961 – கரோல் கிரெய்டர், அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர்
1963 – மன்சூர் இலாஹி, பாக்கித்தானியத் துடுப்பாளர்
1963 – மனோஜ் பிரபாகர், இந்தியத் துடுப்பாளர்
1977 – சுதர்சன் பட்நாயக், இந்திய சிற்பி
1982 – சேத் ரோகன், கனடிய-அமெரிக்க நடிகர், இயக்குநர்
1990 – எம்மா வாட்சன், ஆங்கிலேய நடிகை

இறப்புகள்

1704 – ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட், டச்சுக் கணிதவியலாளர், அரசியல்வாதி (பி. 1628)
1765 – மிகைல் இலமனோசொவ், உருசிய வேதியியலாளர், இயற்பியலாளர் (பி. 1711)
1865 – ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (பி. 1809)
1872 – ஒகஸ்டஸ் சீபே, செருமானிய-பிரித்தானிய பொறியியளாளர் (பி. 1788)
1888 – மேத்யு அர்னால்ட், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1822)
1889 – தந்தை தமியான், பெல்ச்சிய மதகுரு, புனிதர் (பி. 1840)
1980 – இழான் பவுல் சார்த்ர, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1905)
1998 – போல் போட், கம்போடியாவின் 29வது பிரதமர் (பி. 1925)
2005 – டி. எஸ். சந்தானம், தமிழகத் தொழிலதிபர்(பி. 1912)
2006 – எஸ். புண்ணியமூர்த்தி, இலங்கை வானொலி அறிவிப்பாளர்
2006 – நாவண்ணன், ஈழத்துக் கவிஞர், ஓவியர், சிற்பி
2015 – சூரிய பகதூர் தாபா, நேப்பாளத்தின் 24-வது பிரதமர் (பி. 1928)

சிறப்பு நாள்

பன்னாட்டுப் பண்பாட்டு நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!