வரலாற்றில் இன்று – எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம்

 வரலாற்றில் இன்று – எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம்
இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம்
இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் 1961ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். 
இவரது பல படைப்புகள் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை குறிப்பிட்டுள்ளன.
மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டு சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். இவருடைய எழுத்துக்கள் மக்களுக்கு சென்றடைவதை உணர்ந்த அருந்ததி ராய் நாவல்கள், அரசியல் கட்டுரைகள் என பல விதமான படைப்புகளை படைத்து வருகிறார்.
1997ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்-க்கு (The God of Small Things) புக்கர் பரிசு பெற்றார். இவர் புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாடமி பரிசை இவர் மறுத்து விட்டார்.
2004ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசைப் பெற்றுள்ளார். 
முக்கிய நிகழ்வுகள் 
  • 1642ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ஏபல் டாஸ்மன், வான் டீமனின் நிலம் (தற்போதைய தாஸ்மானியா (ஆஸ்திரேலியா)) என்ற தீவை கண்டுபிடித்தார்.

  • 1859ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி சார்லஸ் டார்வின், ஆன் தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் (On the Origin of Species) என்ற நூலை வெளியிட்டார்.

  • 1675ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி இந்திய ஆன்மீக குரு, குரு தேக் பகதூர் மறைந்தார்.

  • 1891ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ஆங்கிலேய ராஜ தந்தரியும், கவிஞருமான லிட்டன் பிரபு மறைந்தார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...