தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம்; மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் -முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம்; மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் -முதலமைச்சர் பழனிசாமி:
தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம். மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமானது . தென்காசி இசக்கிமகால் வளாகத்தில் காலை நடைபெற்ற விழாவில் புதிய மாவட்டத்தின் செயல்பாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 5 ஆயிரம் பயனாளிகளுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும். ராமநதி – ஜம்பு நதி இணைப்பு திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.