தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகம் மறைந்த நாளின்று

 தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகம் மறைந்த நாளின்று

From The Desk of கட்டிங் கண்ணையா🔥

தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகம் மறைந்த நாளின்று😢🐾

🎯புராண நாடகங்கள்,தேசபக்தி நாடகங்கள் அறநெறி மற்றும் சீர்திருத்தக்கருத்துக்கள் கொண்ட நாடகங்கள் என பல்வேறு நாடகங்களை அரங்கேற்றித் தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று மிகவும் பிரபலமாக விளங்கியது, டி. கே. எஸ். சகோதரர்களின் நாடக சபா,

டி.கே.சங்கரன்,டி.கே.முத்துசாமி,டி.கே.சண்முகம்,டி.கே.பகவதி,என்னும் அந்த சகோதரர்கள் நால்வரில் ஒருவர்தான் டி.கே.சண்முகம்.அவர்கள் நாடகத் துறையின் மறுமலர்ச்சிக்கு வித்தூன்றியவர்களில் தலையாய இடத்தைப் பெற்றவர் என்றும் நாடகத்துறையின் தொல்காப்பியர் என்றும் மக்கள் குறிப்பிட்டாங்க.

சண்முகம் தமது ஆறாவது வயதிலேயே நாடகத் தந்தை என்று போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் நடிகராகச் சேர்த்தார்.74,நாடகங்களில் பல்வேறு குணச்சித்திரபாத்திரங்களை ஏற்றுத் தம் சீரிய நடிப்பால் மக்கள் மனதை ஈர்த்தார். அவற்றுள் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அறநெறிப் பாடல்களைப் பழந்தமிழ்ப் பெண்பாற்புலவரான அவ்வை ,என்பவரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கி வயது முதிர்ந்த அவ்வைப் பாட்டி வேடத்தை இவர் தாங்கிச் சிறப்பாக நடித்துத் தமிழ் பெருமக்களின் பாராட்டைப் பெற்றார்.

அதன் பின்னர் இவர் அவ்வை சண்முகம் என்று அந்தப் பாத்திரப் பெயர் அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். பின்னாளில் இவரை நினைவு கூறும் வகையில்தான் கமல் ஒரு படத்திற்கு அவ்வை சண்முகி என்ற பெயர் சூட்டி நடித்து பெருமைப் பட்டுக் கொண்டாராக்கும்

From The Desk of கட்டிங் கண்ணையா

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...