சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் வேல் பாய்ச்சல் -5
வேல் பாய்ச்சல் -5
—————————–
மொழிகளின் மிசையில் தனிப்பெரும் அழகு
அமிழ்தின் இசையில் களிகூறும் பேரழகு -எங்கள்
அங்கம் வளர்த்து சங்கம் கண்ட தமிழ் மகள்.
இங்ஙனம் கூறுவதில் மகிழ்த்தன புராணங்கள்
ஒன்பது வாசல்கள் உடையன மானுடம்
ஒன்பது புராணங்கள் உடையன ஆலயம்
பெரியாபுராணம் தொடங்கி சேது புராணம் வரை
பெருந்தமிழ் விளையாட்டைதனதாக்கி கொண்டன
இறையோனின் முக்கண் போல ,ஒளிக்காட்டி
நிறையென மானுடம் நிம்மதி காண செய்ய
பெரியாபுராணமும் ,திருவிளையாடற் புராணமும்
கந்தபுராணமும் தமிழனின் கையேடு ஆயின ..
அகன்ற நெருப்போனை போல கதிர் பரப்பி
அழகன் குமாரனை பாடும் கந்தபுராணம்,
நன்னாயகம் என நிமிர்ந்தது நின்றதால்
பொன்னோவியமாய் தமிழ் சபையில் ஆளுகின்றன ..
கச்சியப்பர் தவம் இருந்து எழுதிய மொழியை
கந்தம் சரிபார்த்து திருத்தி தர -உலகம்
மெச்சியதோர் புராணம் மெய்யானது
காஞ்சி கோட்டமதில் களம் கண்டது ..