ஒரு ரைட்டராக நான் இதுவரை செய்யாதவைகள்

 ஒரு ரைட்டராக நான் இதுவரை செய்யாதவைகள்

ஒரு ரைட்டராக நான் இதுவரை செய்யாதவைகள்

1) எந்த ஒரு எழுத்தாளருக்கும் என் புத்தகத்தை அனுப்பி வைத்ததில்லை.

2) எந்த ஒரு நாளிதழுக்கும், பத்திரிகைக்கும் , அவர்கள் கேட்காமல் என் புத்தகத்தை அனுப்பி வைத்ததில்லை.

3) என் புத்தகத்தை வாங்குங்கள் என தனிப்பட்ட எவருக்கும் வேண்டுகோள் வைத்ததில்லை.

4 ) வாட்ஸப் அல்லது மெசேஞ்சரில் தொடர்பு கொண்டு புத்தகம் வாங்குங்கள் என கோரிக்கை வைத்ததில்லை.

5) என் புத்தக விற்பனைக்காக தனிப்பட்ட எந்த ஒரு குழுவையும் ஏற்படுத்தி அதில் உறுப்பினர்களைச் சேர்க்கவில்லை.

6) எவரும் கேட்காமலேயே , இலவசமாக என் புத்தகங்களைத் தந்து தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியது இல்லை.

7) என் புத்தகத்தைப் படிச்சிட்டு எழுதி கொஞ்சம் ப்ரொமோட் செய்ங்க ஹி ஹி என நின்றதில்லை.

😎 என் புத்தகங்களை எப்போதும் கையோடு தூக்கிக்கொண்டு அலைந்ததில்லை.

9) நெருங்கிய நண்பர்களாகவே இருப்பினும் , இன்பாக்ஸில் உறவு பாராட்டுபவர்களாக இருப்பினும் , அடுத்த எழுத்தாளரைக் குறுப்பிட்டு எழுதுகையில் , என்னை ஏன் குறிப்பிடலை என கேட்டதே இல்லை.

10) என் நெருங்கிய நண்பர்களிடம் கூட என்னோட இந்த லேட்டஸ்ட் புக் படிச்சிட்டியா என கேட்டதில்லை (எழுத்து மூலம் நெருங்கிய நண்பர்கள் ஆனவர்கள், பிறகு வாசிக்கும் பழக்கத்தை விட்டொழித்தவர்கள்)

இன்னும் 100 பாயிண்ட் சொல்லலாம். 10 போதும் என்பதால் நிறுத்திக்கொள்கிறேன்.

பொதுவெளியில் என் புத்தகங்களை ப்ரோமோஷன் செய்வேன். வேண்டும் என கேட்பவர்களுக்கு தகவல் அளிப்பேன். அதிலே கூட கால தாமதம் , கம்யூனிகேஷன் குறைபாடு இருக்கலாம்.

இதையெல்லாம் நான் செய்யவில்லை என்றுதான் சொல்கிறேனே தவிர , இதெல்லாம் தவறு அல்ல. நான் இப்படி இருக்கிறேன் , அவ்வளவுதான்.

-அராத்து

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...