உடைந்தது அணை

 உடைந்தது அணை


உடைந்தது அணை

ரஷ்யாவில் உள்ள சைபீரிய மாகாணத்தில் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


இங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நீர்த்தேக்கம் ஒன்றில் சேகரிக்கப்படுகிறது. இதனை கண்காணிப்பதற்கும் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் சேகரிக்கப்படும் தண்ணீரின் அளவு, வெளியேற்றம் ஆகியவற்றை கவனித்து வருகின்றனர்.


இந்நிலையில் தான் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று முன் தினம் நள்ளிரவு 2 மணியளவில் சுரங்கத்தின் மேல் உள்ள நீர்த்தேக்கம் உடைந்துள்ளது. இதிலிருந்து ஆர்ப்பரித்து வெளியேறிய தண்ணீர், அருகிலிருந்த சுரங்கத்திற்குள் நுழைந்தது.

அப்போது அங்கு 270 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சுரங்கத்திற்குள் அதிவேகமாக நுழைந்த தண்ணீரில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அதில் மூழ்கி முச்சுத் திணறி 12 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் ரஷ்ய அவசர அமைச்சகத்தின் சைபீரியா மீட்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 5 எம்.ஐ-8 ஹெலிகாப்டர்கள், எம்-26 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை சம்பவ இடத்திற்கு விரைந்தன.

இவை தொழிலாளர்களை காப்பாற்றுவதற்காக தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் அணை உடைந்து, சுரங்கம் மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதேசமயம் காணாமல் போன 13 பேரை தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சைபீரியா மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன தொழிலாளர்களின் குடும்பத்தினர் நல்ல செய்தி கிடைக்கும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...