மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

 மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தரப்பில் அனைத்தும் ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது

– அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்


சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்பாக ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வட கிழக்கு பருவ மழை காலம், இந்த கால கட்டத்தில் தான் தமிழகத்திற்கு தேவையான 48% நீர் கிடைக்கிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த மாதம் முதல்வர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், நேற்றும் மழை தொடர்பாக முதல்வர் விரிவாக ஆலோசனை நடத்தி, அதில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...