இன்றைய முக்கிய செய்திகள்
சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.76.09க்கும், டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.69.96க்கும் விற்பனை
திருச்சி: ஸ்ரீரங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1.61 லட்சம் பணம் பறிமுதல் – பத்திரப்பதிவு அலுவலர் ராஜேந்திரன் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரை.
மதுரை மத்திய சிறைக்காவலர்கள் நடத்திய சோதனையில் கைதி நாகராஜிடம் 4 சிம் கார்டுகள் பறிமுதல். கைதிகள் செல்போன் பயன்படுத்துகின்றனரா என சோதனை செய்ததில் 4 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுக்கூட்டம், அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியின் பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களை சமர்ப்பிக்கின்றனர்.
நாங்குநேரி தொகுதியில் பட்டுவாடாவுக்கு பணம் வைத்திருந்ததாக, திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு.
7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் தீர்மானத்தை தமிழக ஆளுநர் நிராகரித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம். உள்ளாட்சி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு. பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பொதுப் பிரிவுக்கான சின்னங்களையும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை போலியாக வைக்கப்பட்டதாக கூறி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ சரவணன் மனு.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த நிலையில் இன்று சிபிஐ அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.29,344க்கு விற்பனை
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, எஸ்.ஏ.பாப்டே-வை நியமிக்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை
இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
டெல்லியில் தக்காளி விலை கடும் உயர்வு; ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனை