ரயில்வே கட்டணம்
இந்தியாவின் முதல் தனியார் ரெயில் ரயில்வே கட்டணச் சட்டத்தை மீறி அதிக கட்டணம் வசூல்
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) நாட்டின் முதல் தனியார் மூலம் இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை டெல்லி-லக்னோ பாதையில் அக்டோபர் 4-ந்தேதி முதல் தொடங்கியது.
இந்த சேவை இந்திய ரயில்வேயில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும் என்றும் தொடர்ந்து தனியார்கள் மூலம் நாட்டில் 24 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவின் முதல் தனியார் ரெயில் சேவை (1989ம் ஆண்டு) ரயில்வே சட்டத்தை மீறியுள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக கட்டணத்தை தனியார் நிறுவனம் வசூலிக்கிறது. ஆனால் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்றும் ஐ.ஆர்.சி.டி.சிக்கு இல்லை என்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அக்டோபர் 4ம் தேதி லக்னோ-டெல்லி-லக்னோ ரயில் பாதையில் தொடங்கபட்ட மிகவும் பிரபலமான தனியார் ரெயில் சேவை, தற்போதுள்ள சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் அதே பாதையில் உள்ள பிற ரயில்களை விட அதிக கட்டணம் வசூலிக்கிறது. மித அதிவேக தேஜாஸ் எக்ஸ்பிரஸின் முழுமையான குளிரூட்டப்பட்ட ரேக்குகளைப் பயன்படுத்தி இரண்டு பிரீமியம் ரெயில்களை இயக்கும் பணியை இந்திய ரயில்வே துறை அதன் வணிக சுற்றுலா மற்றும் கேட்டரிங் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சிக்கு ஒப்படைத்தது. இரண்டாவது தனியார் ரயில் விரைவில் மும்பை-அகமதாபாத்-மும்பை துறையில் இயக்கப்படுகிறது.
கார்ப்பரேட் நிறுவனம் இயக்கும் முதல் ரயில் பயணிகளிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் வசதிகள் மற்றும் போர்டு சேவை உலகளாவிய தரத்துடன் உள்ளது.