ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா
2-ஆவது முறையாக பிரதமரான பின்னர் முதல் முறையாக தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தருகிறார்
சென்னை ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா இன்று கிண்டியில் உள்ள அக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் மோடி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் அவர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் கிண்டி ஐஐடி வளாகத்திற்கு காலை 9.15 மணிக்கு வருகிறார். இந்தியா- சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கான கண்காட்சியையும் பார்வையிடுகிறார். பின்னர் 11.40 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து நண்பகல் 12.45 மணிக்கு டெல்லி புறப்படுகிறார். என்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்.. டிரம்ப் ஆவேசம் இதனிடையே சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் தனது உரையில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து ஐஐடியின் இன்னாள், முன்னாள் மாணவர்கள் நமோ செயலியில் தெரிவிக்குமாறு டுவிட்டரில் பிரதமர் கேட்டு கொண்டார். 2-ஆவது முறையாக பிரதமராக வெற்றி பெற்ற பின்னர் முதல்முறையாக மோடி தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.பிரதமரின் வருகையையொட்டி 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீஸார் ஐஐடி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் 2000-க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.