வரலாற்றில் இன்று ( 01.12.2023 )

 வரலாற்றில் இன்று ( 01.12.2023 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

டிசம்பர் 1  கிரிகோரியன் ஆண்டின் 335 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 336 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 30 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1420 – இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.
1640 – போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான்.
1768 – அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது.
1822 – முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான்.
1875 – வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார்.
1918 – ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.
1918 – சேர்பிய, குரொவேசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொஸ்லாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.
1924 – எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1934 – சோவியத் ஒன்றியத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1958 – பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது.
1958 – சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.
1959 – பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1960 – கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.
1961 – இந்தோனீசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.
1963 – நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.
1965 – இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
1971இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.
1973 – பப்புவா நியூ கினி ஆஸ்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.
1981 – யூகொஸ்லாவியாவின் விமானம் ஒன்று கோர்சிக்காவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் கொல்லப்பட்டனர்.
1981 – எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.
1982 – முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து.
1989 – பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு ஜேர்மனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.
1989 – பிலிப்பீன்ஸ் அதிபர் கொரசோன் அக்கீனோவை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
1991 – பனிப்போர்: உக்ரேன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரேன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.

பிறப்புகள்

1935 – வூடி அலன், அமெரிக்க திரைப்படம்|திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்.
1954 – மேதா பட்கர், இந்திய சமூக ஆர்வலர்.
1960 – உதித் நாராயண், இந்திய திரைப்படம்|திரைப்படப் பின்னனிப் பாடகர்.
1963 – அர்ஜூன றணதுங்க, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர்.

இறப்புகள்

1825 – முதலாம் அலெக்சாண்டர், ரஷ்ய சார் மன்னன் (பி. 1777)
1973 – டேவிட் பென்-குரியன், இஸ்ரேலின் முதல் பிரதமர் (பி. 1886)
1990 – விஜயலட்சுமி பண்டிட் (பி. 1900)

சிறப்பு நாள்

உலக எய்ட்ஸ் நாள்
போர்த்துக்கல் – விடுதலை நாள்
மத்திய ஆபிரிக்கக் குடியரசு – விடுதலை நாள் (1958)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...