நவராத்திரியின் மகிமை”
நவராத்திரியின் மகிமை”
ஒன்பது நாள் நாம் இருக்கும்
தவம்.
நவராத்திரி நமக்கு அளிக்கும்
வரம்.
பராசக்தியின் வடிவங்கள்
பல
அவளை வழிபடுவோம் வரங்கள்
பல பெற.
முதல் நாளில் அடங்காத நம்
காமத்தை எரிப்பாள்.
இரண்டாம் நாள் நம் தணியாத
கோபத்தைத் தணிப்பாள்.
மூன்றாம் நாள் மயக்கம் தரும்
மோகத்தை மாய்ப்பாள்.
நான்காம் நாள் பேராசை
பிசாசுதனை கொல்வாள்.
ஐந்தாம் நாள் நம் ஆணவ
அரக்கனை அழிப்பாள்.
ஆறாம் நாள் பொறாமைத்
தீயதனை பொசுக்கி
ஏழாம் நாள் வீழ்ச்சி தரும்
சுயநலத்தை வீழ்த்தி
எட்டாம் நாள் அநீதி என்னும்
அதர்மத்தை அழிப்பாள்.
ஒன்பதாம் நாள் கொடுமை என்னும் குற்றத்தை ஒழிப்பாள்.
பத்தாம் நாள் விஜயததசமி
அன்று
தன் ஆயுதங்கள் அத்தனையும்
அகற்றி
துர்கையவள் பத்மாசனத்தில்
அமர்வாள்.
தனை மறந்து தியானத்தில்
லயிப்பாள்.
முடிவில் மிச்சமுள்ள நம்
அகங்காரத்தை அழித்து
மானுடர்கள் பரம்பொருளை
அடைய
வழி கூறி
வாழ்த்தி விட்டுச் செல்வாள்.
எனவே, இவ்வொன்பது
நாட்களிலும் நாமும்
தவறாது துர்க்கை
அம்மனைத் துதித்து
அவள் அருள் பெற்று
பிறவிப் பயனைப் பெறுவோம்.
பிறவாமை லட்சியத்தை
அடைவோம்.
வைத்தியலிங்கம்