திருநெல்வேலிக்கு நற்செய்தி.. கிளம்புது.. வந்தே பாரத் ரயில் “

 திருநெல்வேலிக்கு நற்செய்தி..  கிளம்புது.. வந்தே பாரத் ரயில் “

திருநெல்வேலிக்கு நற்செய்தி.. “வந்தே பாரத்” கிளம்புது.. வந்தே பாரத் ரயில் “

ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சென்னை-நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவில் தன் சேவையை தொடங்க போகிறது.. எப்போது தெரியுமா?

வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால், மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில், என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்பதால்தான், ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் சேவையையும் நேரடியாகவே சென்று பிரதமர் துவக்கி வைத்து வருகிறார். வந்தே பாரத்: நம்முடைய தமிழ்நாட்டில்கூட, 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன..

சென்னை – மைசூரு & சென்னை – கோவை ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்குகின்றன. இதில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இப்போது, சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தப்போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து, அதற்கான பணிகளும் நடந்தன. இதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட பிட்லைன் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி அதாவது சுதந்திர தின நாளில், இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கம் தொடங்கும் என்றார்கள். ஆனால், அன்றைய தினம் தொடங்கப்படவில்லை. இதற்குபிறகு பலமுறை வேறு வேறு தேதிகள் அறிவிக்கப்பட்டு, அவைகள் மாற்றப்பட்டன. பிறகு, செப்டம்பர் மாதம் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வந்தே பாரத் ரெயில் இயங்கும் என்றார்கள். தற்போது, வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். இனறைய தினமும், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் இன்று சந்திப்பு ரெயில் நிலையத்தில் இறுதிக்கட்ட ஆய்வினை மேற்கொள்ள போகிறார்

யில்வே அதிகாரிகள்: வரும் ஞாயிறன்று, நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11 முதல் 11.30 மணிக்குள் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு புறப்படும் என்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சந்திப்பு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இந்த சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயிலில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா? மொத்தம் 8 பெட்டிகள் இருக்கிறதாம்.. ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும்.. சுமார் 660 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரெயில் 8 மணி நேரத்தில் அடையக்கூடும்..

1 பெட்டி விஐபிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விஐபி பெட்டியில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.2,800 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலும், மற்ற பெட்டிகளில் தனிநபர் ஒருவருக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை வசூலிக்கப்பட உள்ளது. இந்த ரெயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு நெல்லை வந்தடையும்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...