டாக்டர் பட்டம் பெற்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி

 டாக்டர் பட்டம் பெற்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி

தனியிசை (ஆல்பம்), ராப் பாடல்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. பின்னர், இசையமைப்பாளர்,  நடிகர், இயக்குநர் எனப் பன்முகத் தன்மையோடு தமிழ் படங்களில் நடித்தும் இயக்கியும் வருகிறார். அவர் படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

டாக்டர் பட்டம்
கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பிரிவில் ‘இசைத் தொழில் முனைவோர்’ (Musical Entrepreneurship) என்பதை மையமாக வைத்து ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தார். பல புதிய தனியிசைக் கலைஞர்களைத் திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்தி வரும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதிக்குத் தனது ஆராய்ச்சி இசையை வாழ்க்கையாக கொண்டோருக்கு உதவும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

அவர் பி.ஹெச்.டி. ஆராய்ச்சிப் படிப்பை நிறைவு செய்ததை அடுத்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில் 24-08-2023 அன்று நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஹிப்ஹாப் ஆதிக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார்கள். இசைத் தொழில் முனைவோர் என்ற ஆராய்ச்சிப் பிரிவில் ஒருவர் டாக்டர் பட்டம் பெறுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும்.
இது பற்றி ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி பேசும்போது: “இசையில் தொழில்முனைவுப் பிரிவில் ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்து, கடந்த ஆண்டு ஆய்வை நிறைவு செய்தேன். அந்த வகையில் இன்று, பட்டமளிப்பு விழாவில் அதற்கான பட்டத்தைப் பெற்றுக் கொண்டேன். வேறு பணிகளைச் செய்துகொண்டே ஆய்வு செய்தது சற்று கடினமாக இருந்தது” என்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...