ஜப்பானில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு பசிபிக் கடலில் கலப்பு!

 ஜப்பானில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு பசிபிக் கடலில் கலப்பு!

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. கதிர்வீச்சை தடுக்க கடல் நீர் பயன்படுத்தப்பட்டது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஜப்பான் தனது முயற்சியில் வெற்றி
பெற்றது.

அணுக்கசிவை கட்டுப்படுத்த பயன்படுத்த கடலில் நீர்,  கதிரியக்க கழிவு நீராக மாறியது. அந்த நீரை சுத்திகரித்து பசிபிக் கடலில் விட ஜப்பான் முயற்சி மேற்கொண்டது.

இதற்கான சுத்திகரித்து அவற்றை பேரல்களில் சேமித்து வைத்திருந்தது. ஆனால், மீனவர்கள் மற்றும் சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

ஆனால், நீரை வெளியேற்றுவதற்கான அனைத்து அனுமதிகளையும் ஜப்பான் பெற்றது. இதனால் இன்று முதல் (ஆகஸ்ட் 24) சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வெளியேற்றப்படும் என கடந்த வாரம் ஜப்பான் பிரதமர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று முதல் பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் பசிபிக் கடலில் திறந்து விடப்பட்டுள்ளது.

அணுஉலை நிலையத்தின் கட்டுப்பாடு அறையில் இருந்து லைவ் வீடியோ மூலம் தண்ணீர் திறந்து விடப்படும் காட்சி வெளியானது. அதில் முக்கிய ஆபரேட்டர் ஒருவர், “கடல் நீர் வெளியேற்றப்படும் பணி செயல்படுத்தப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...