சந்திரயான் நிலவில் இறங்கும் திக் திக் நிமிடங்கள் …. பார்வையிடுகிறார் பிரதமர் மோடி! | தனுஜா ஜெயராமன்
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சந்திரயான் நெருங்கிவரும் ‘திக்திக்’ நிமிடங்கள் வரலாற்றில் கால் பதிக்கிறது சந்திரயான்-3. நிலவில் நாளை ‘லேண்டர்’ தரை இறங்குவதை பிரதமர் மோடி பார்வையிட உள்ளதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சந்திரயான் 3 விண்கலம் தரையிறக்கும் நிகழ்வை அங்கிருந்து பார்வையிட உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. கடைசி 15 நிமிடங்கள் லேண்டர் கருவியின் செயல்பாட்டை நொடிக்கு நொடி எச்சரிக்கையுடன் கண்காணிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம் வகுத்துள்ளனர். தற்போது, நிலவை தொட்டுவிடும் தூரத்தில் லேண்டர் கருவி சுற்றி வருகிறது.