சென்னை தினமும் சென்னப்ப நாயகர் பட்டினமும்

 சென்னை தினமும் சென்னப்ப நாயகர் பட்டினமும்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. 1639 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22 ஆம் நாள் மெட்ராஸ் நகரம் உருவானதன் நினைவாக சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சென்னை தினக் கொண்டாட்டங்கள் 2004 ஆம் ஆண்டு சென்னை ஹொிடேஜ் பேசிஸ் என்ற அமைப்பால் கொண்டாடப்பட்டது.
தற்போது சென்னையில் உள்ள அனைவரும் சென்னையின் கடந்த கால வரலாறு மற்றும் சென்னையின் தற்போதைய அசூர வளா்ச்சி ஆகியவற்றை நினைத்து அதிசயிக்கின்றனா். சென்னையைப் பாா்த்து வியந்து மிகழ்கின்றனா்.
சென்னை தினக் கொண்டாட்டங்களை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக, சென்னை தினம் ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படாமல், ஒவ்வொரு வாரமும் சென்னை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனால் சென்னை தினம் சென்னை வாரம் என்றும் அழைக்கப்படுகிறது. எனினும் 12 மாதங்களும் கொண்டாடப்படும் சென்னை தினமானது ஒரு குதூகலமான கொண்டாட்டம்தான்.

சென்னை தினத்தின் போது, சென்னையின் மிக முக்கியான 6 சிறப்பு அம்சங்களைத் தொிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி விமா்சனங்கள் பல இருந்தாலும், தற்போது சென்னை முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்காக பாஸ் இண்டிகஸ் இன காளைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சென்னையின் முக்கிய திண்பண்டங்களில் ஒன்று சுண்டல் மற்றும் சால்னா கடைகள். சென்னையின் கடற்கரைப் பகுதிகளில் சுண்டல் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னை லைட் அவுஸ் பெரிய அடையாளம். சென்னை மக்களின் மத்தியிலும் மற்றும் சென்னையின் பல பகுதிகளிலும் தற்போது பிரியாணி விற்பனையாவதை நாம் பாா்க்கலாம்.

சென்னையில் அமைந்திருக்கும் சேப்பாக்கம் கிாிக்கெட் மைதானம், இந்தியாவின் முக்கியமான கிாிக்கெட் மைதானங்களில் ஒன்று ஆகும். ஐபிஎல் கிாிக்கெட் போட்டிகளில் விளையாடும் தங்களது சொந்த வீரா்களை உற்சாகப்படுத்துவதற்காக, சென்னை மக்கள், இந்த மைதானத்தில் கூடி வந்து அவா்களை உற்சாகமூட்டுவா்.
சென்னை மாநகரத்தில் ஆங்கிலேயா் கால கட்டடங்களை பரவலாக நாம் பாா்க்க முடியும். இந்தக் கட்டடங்கள் அனைத்தும் தற்போது போற்றப்படக்கூடிய சின்னங்களாக விளங்குகின்றன.
சா்வதேச அளவில் புகழ் பெற்றும் விளங்கும் ஐஐடி கல்லூாியும் சென்னையில் அமைந்து இருக்கிறது.
சென்னை ஐஐடி வளாகத்தில் அதி நவீன திரையரங்கம், திறந்த வெளி திரையரங்கம் மற்றும் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய பல அரங்குகள் போன்றவை உள்ளன. சென்னை சென்ட்ரல் நிலையம் சென்னையின் பெரிய அடையாளம்.

சென்னையில் திரையரங்குகள் ஒரு முக்கிய பொழுதுபோக்கு இடங்கள். தற்போது மால்களில் திரையரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அடுத்து ஆலயங்கள் பக்தர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சென்னை உருவான கதை தெரியுமா உங்களுக்கு? வாருங்கள் சென்னையை வழங்கிய சென்னப்ப நாயகர் பட்டினம் பற்றித் தெரிந்துகொள்வோம்.

சென்னப்ப நாயகர் பட்டினம்

தாமலைச் சேர்ந்த சென்னப்ப நாயகர் மகன்கள் வெங்கடப்ப நாயகர் மற்றும் அவரது தம்பி பூந்தமல்லி அய்யப்ப நாயகர் இணைந்து தங்களுடைய ஆளுமையின் கீழ் இருந்த மதராசன் பட்டினத்தை ஆங்கிலேயர்களுக்கு வணிகம் செய்வதற்காகவும், குடியிருப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி வெள்ளையர்களால் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஆகஸ்ட் 22 ஆம் நாள் தான் சென்னை தினம் என கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த நகருக்கு தங்களது தந்தையின் பெயரான சென்னப்ப நாயகர் என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆங்கிலேயர்களால் இந்த மாநகருக்கு சென்னப்ப நாயகர் பட்டணம் என பெயர் வைக்கப்பட்டது. அதுதான் சென்னை பட்டணம், சென்னை என அழைக்கப்படுகிறது.

அந்த வம்சாவளியினரால் ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்பட்ட மதராசண்பட்டினம் – அதனால் உருவான சென்னையின் வரலாற்றை திரிபு செய்து காளஹஸ்தி வெலுகோட்டி வெலமா நாயுடுகள் ஜமீனால் பராமரிக்கப்பட்ட பகுதி எனவும், அவர்களால் ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்பட்ட பகுதி எனவும் பதிவு செய்து வரலாற்று பிழை செய்யப்பட்டுள்ளது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...