இன்றைய ராசி பலன் (வியாழன் 17 ஆகஸ்டு 2023)

 இன்றைய ராசி பலன் (வியாழன் 17 ஆகஸ்டு 2023)

மேஷம் : இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்காது. அலுவகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு என்பது கிடைக்காத காரணத்தினால் நீங்கள் கவனமாகவும், திட்டமிட்டும் பணிகளை செய்வது அவசியம். துணைவியிடம் நல்ல புரிந்துணர்வு காணப்படாது. மேலும் இன்று பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.

ரிஷபம் : இன்றைய நாள் பதற்றம் நிறைந்த நாளாக காணப்படும். அதனால் செய்யும் செயலில் கவனம் மிகவும் முக்கியம். அதேபோல் அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு திட்டமிட்டு செயல்படுவது மிகவும் நல்லது. துணைவியிடம் சுமுகமான முறையில் பேசுவீர்கள். இன்று உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்க்கு நிதிநிலை இருக்கும்.

மிதுனம் : இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமையினை வெளிப்படுத்தி பணிகளை சிறப்பாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். மேலும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறிது அதிகரிக்கும். மேலும் இன்று திருப்தி அளிக்கும் வகையில் பண வரவு இருக்கும்.

கடகம் : இன்றைய நாள் அமைதியினை பின்பற்றக்கூடிய நாளாக இருக்கிறது. மேலும் இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகும் வாய்ப்புகள் இன்று காணப்படும். துணைவியிடம் பேசும் போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பேசுவது நல்லது. இன்றை பொறுத்தவரை நிதிநிலையில் வரவை விட செலவுகள் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும்.

சிம்மம் : இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையாது. அலுவகத்தில் உங்களுக்கான வேலையினை திறம்பட செய்வது எப்படி என்று யோசித்து செய்வது நல்லது. மனைவியிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இன்று வரவும், செலவும் கலந்த ஒரு நாளாக தான் இருக்கும்.

கன்னி : இன்றைய நாள் பதற்றமும், குழப்பமும் நிறைந்த நாளாக தான் அமையும். பணியிடத்தில் வழக்கத்திற்கு மாறாக இன்று பணிகள் இருப்பதனால் அதனை செய்து முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். மேலும் துணையிடம் மனம் விட்டு பேசி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று பணத்தை கவனமாக கையாள வேண்டும்.

துலாம் : இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருப்பதனால் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அதேபோல் அலுவகத்தில் திருப்தி அளிக்கும் விதமாக பணியிடசூழல் இருக்கும். நட்பான முறையில் மனைவியிடம் பேசி மகிழ்வீர்கள். இன்று நீங்கள் எதிர்பார்த்ததை விட பண வரவு அதிகமாக இருக்கும்.

விருச்சிகம் : இன்றைய நாள் உற்சாகம் நாளாக இருக்கும். பணியிடத்தில் புதிய முயற்சிகள் எடுப்பதில் வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவி இடையே நீண்ட நாட்களுக்கு பிறகு புரிந்துணர்வு அதிகமாக இருக்கும். இன்று நிதிநிலை அதிகமாக இல்லை என்றாலும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு பண வரவு இருக்கும்.

தனுசு : இன்றைய நாள் பொறுப்புகள் நிறைந்த நாளாக அமையும். அதனால் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அதேபோல் அதிகமான வேலை இன்று அலுவலகத்தில் இருப்பதனால் திட்டமிட்டு செயல்பட வேண்டும். துணையிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது குடும்பத்திற்கு நல்லது. இன்று நடுநிலையுடன் தான் நிதிநிலை இருக்கும்.

மகரம் : இன்றைய நாள் சாதகமான நாளாக இல்லாத காரணத்தினால் முக்கிய முடிவுகள் எடுப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. உங்களின் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் இன்று கிடைக்காத காரணத்தினால் சிறிது கவலை ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கி புரிதல் ஏற்படும். மேலும் இன்று பண வரவு திருப்தி அளிக்கும் விதமாக இருக்காது.

கும்பம் : இன்றைய நாள் சுறுசுறுப்பும், வளர்ச்சியும் நிறைந்த நாளாக இருக்கும். இன்று உங்களின் திறமைக்கு ஏற்ற பாராட்டு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். கணவன் மனைவி இடையே சந்தோசமாக பேசுவீர்கள். இன்று பண வரவு அதிகமாக இருப்பதனால் செலவிற்கு போக சேமிப்பிற்கும் பண வரவு இருக்கும்.

மீனம் :  இன்றைய நாள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வெற்றி அளிக்கும் விதமாக இருக்கும். உங்களின் வேலையில் வளர்ச்சியும், முயற்சியும் மேலோங்கி காணப்படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மனைவியிடம் மனம் விட்டு பேசி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அளவுக்கு அதிகமாக இன்று பண வரவு இருக்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...