பாகிஸ்தானை வென்ற இந்திய அணி…!

 பாகிஸ்தானை வென்ற இந்திய அணி…!

ஏழாவது ஆசிய ஹாக்கி சாம்பியன் டிராபி போட்டி சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் என்றாலே விளையாட்டு களத்தில் பரபரப்புகளுக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. அதிலும் தற்போது இந்திய அணி 10 புள்ளிகளை பெற்று முன்னணியில் உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஹாக்கி போட்டி நேற்று இரவு சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த அணிகள் தற்போது அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் இந்திய அணி கலந்து கொண்ட 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. மேலும் ஒரு போட்டியில் ட்ராவில் முடிவடைந்துள்ளது. தற்போது இந்திய அணி 10 புள்ளிகளை பெற்று முன்னணியில் உள்ளது.

மேலும் இந்திய அணி உலக தரவரிசை பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 16வது இடத்தில் உள்ளது.

அதேநேரம் இரண்டு அணிகளும் போட்டியில் வெற்றி பெற தீவிரம் ஆர்வம் காட்டி வந்தனர்.

ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 2 கோல் அடித்து அசத்தினர். இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் 13 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...