மெட்ரோ பயணச்சீட்டு பெற Paytm செயலி அறிமுகம்

 மெட்ரோ பயணச்சீட்டு பெற Paytm செயலி அறிமுகம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் எளிய வகையில் பயணச்சீட்டுகளை Paytm செயலி மூலம் பெறுவதற்கான புதிய வசதியை மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் சென்னை, தலைமை அலுவலகமான மெட்ரோஸில் அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவன இயக்குநர்கள், தி. அர்ச்சுனன் (திட்டங்கள்), டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி), அலோசகர் கே.ஏ. மனோகரன் (சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), Paytm நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் அங்கித் சவுத்ரி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர். 

மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மெட்ரோ இரயில் பயணத்திற்கான தற்போதுள்ள டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகளுக்கு மாற்றாக மெட்ரோ பயணிகள் எளிய வகையில் மெட்ரோ பயணச்சீட்டுகளைப் பெறுவதற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஏற்கனவே வாட்ஸ்அப் மூலம் QR குறியீடு பயணச்சீட்டு பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது Paytm நிறுவனத்துடன் இணைந்து Paytm செயலி மூலம் QR குறியீடு பயணச்சீட்டை பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்த்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது. மேலும், இந்தச் சேவைகள் தற்போதுள்ள 20% கட்டணத் தள்ளுபடியையும் வழங்குகிறது.

இதன் மூலம், மெட்ரோ இரயில் பயணிகள் தங்கள் Paytm செயலியில் மெட்ரோ பிரிவின் கீழ் நுழையும் நிலையம் மற்றும் சேருமிட நிலையத்தைக் குறிப்பிட்டு QR பயணச்சீட்டை வாங்க முடியும். Paytm Wallet, Paytm UPI, Paytm UPI Lite, Paytm Postpaid, net-banking or cards போன்ற கட்டண விருப்பங்களை Paytm app தேர்வு செய்து கொள்ளலாம்.

மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள நுழைவு மற்றும் வெளியேறும் நிலையங்களில் உள்ள தானியங்கிக் கட்டண வசூல் வாயில்களின் QR குறியீடு ஸ்கேனரின் முன் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போனை வைத்த பின்னர் மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளலாம்.

மெட்ரோ இரயில் பயணிகள் Paytm செயலி மூலம் பயணச்சீட்டு பெறுவதற்கான வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டு கொள்கிறது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...