வெளியானது கேப்டன் மில்லரின் வெறித்தனமான டீசர்..!

 வெளியானது கேப்டன் மில்லரின் வெறித்தனமான டீசர்..!

நடிகர் தனுஷின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் மிரள வைக்கும் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதுவரையில் பார்க்காத அளவுக்கு ஒரு தனுஷை திரையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் காட்டி உள்ளார். ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் இன்னொரு தரமான இயக்குநர் ரெடியாகி வருகிறார் என நிரூபித்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

அண்ணன் செல்வராகவனை வைத்து சாணிக் காயிதம் எனும் சம்பவத்தை பண்ண அருண் மாதேஸ்வரன், தனுஷை வைத்து கேஜிஎஃப் படத்துக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு மரண லெவல் சம்பவத்தை தமிழில் செய்துள்ளார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கும், விஜயலக்‌ஷ்மி அம்மாளுக்கும் மகனாக 1983ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி சென்னையில் பிறந்த நடிகர் தனுஷ் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறர். இந்த வயதிலும், தன்னால் இளமையாக நடிக்க முடியும் என இந்த ஆண்டு வெளியான வாத்தி படத்தில் நடித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய தனுஷ், இந்த வயதுக்கு ஏத்த நடிப்பை என்கிட்ட இருந்து பாருங்க என தற்போது கேப்டன் மில்லர் டீசரை வெளியிட்டு மரண சம்பவம் செய்துள்ளார்.

ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் நடிகர் தனுஷை வைத்து இப்படியொரு மிரட்டலான படத்தை இயக்கி வருகிறார் என ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

அந்த அளவுக்கு வெயிட்டான போர் காட்சிகள் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் படத்தை தமிழ் சினிமாவே வியக்கும் அளவுக்கு தரமாக உருவாக்கி தனுசுக்கு பிறந்தநாள் பரிசாகவே அருண் மாதேஸ்வரன் கொடுத்துள்ளார்.

தாடி, குடுமி என நடிகர் தனுஷை பார்ப்பது போலவே தெரியாமல் கேப்டன் மில்லராகவே தனுஷ் வாழ்ந்து இருப்பதை ஒவ்வொரு ஃபிரேமிலும் பார்க்க முடியுகிறது.

அதிலும், அந்த பெரிய ரக துப்பாக்கியை வைத்துக் கொண்டு அவர் நடித்துள்ள காட்சிகள் நிச்சயம் கேஜிஎஃப் படத்தை தூக்கிச் சாப்பிடும் ரகத்தில் உள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கேப்டன் மில்லர் திரைப்படம் 1940 மற்றும் 1990 காலகட்டத்தை பிரதிபலிக்கும் கதையாக இருக்கும் என்றும். மேலும், இப்படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வரும் இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

டீசரில் எந்த ஒரு வசனமும் இல்லாமல், முழுக்க துப்பாக்கி சத்தம் தான், வழக்கம் போல ஜிவி பிரகாஷின் இசை கவனத்தை ஈர்க்கிறது.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் தான் சிவராஜ்குமார் வெயிட்டு காட்டப் போகிறார் என்றால் அதை விட தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்து தனுஷுக்கு எதிராக அவர் சண்டை போடும் காட்சிகள் எல்லாமே ஓரே ஒரு ஃபிரேமிலேயே வெறித்தனம் காட்டுகிறது.

நடிகர் சந்தீப் கிஷன் ஒரு ஃபிரேமிலும் நடிகை பிரியங்கா மோகன் இதுவரை பார்க்காத ரூபத்திலும் இந்த டீசரில் இடம்பிடித்துள்ளனர். சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷை வித்தியாசமாக நடிக்க வைத்த அருண் மாதேஸ்வரன் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா மோகனை நடிக்க வைத்துள்ளார். போராளியாக அவர் வரும் காட்சிகள் மட்டுமே டீசரில் கொஞ்சம் காமெடியாக தெரிந்தாலும், படத்தில் நிச்சயம் அவரது போர்ஷனும் மிரள வைக்கும் என எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் தனுஷ் ரசிகர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வெளியாக உள்ள கேப்டன் மில்லரை கொண்டாட போகின்றனர்.

நடிகர் தனுஷின் பிறந்தநாளுக்கு இப்படியொரு வெறித்தனமான பரிசு வரும் என ரசிகர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என கேப்டன் மில்லர் டீசரை பார்த்து பாராட்டி சோஷியல் மீடியாவையே நள்ளிரவில் அதகளம் செய்து வருகின்றனர்.

#CaptainMilIer ஹாஷ்டேக்கை போட்டு தனுஷ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கேப்டன் மில்லர் டீசரை பாராட்டியபடியே நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.

சர்வதேச தரத்தில் படத்தின் காட்சிகள் இருக்கு என்றும் இந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதிக்கு கிளாஷ் விட யாருக்காவது தில் இருக்கா என்றும் தனுஷ் ரசிகர்கள் சவால் விட்டு வருகின்றனர்.

கேப்டன் மில்லர் டீசரை பார்த்த ரசிகர்கள் மரியான் படத்துக்கு பிறகு மிகவும் வித்தியாசமாக நடிகர் தனுஷ் இந்த படத்தில் நடித்துள்ளார் என்றும் போர்க் காட்சிகளை தத்ரூபமாக கொடுத்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மிரள வைத்துள்ளார் என தனுஷ் ரசிகர்கள் #CaptainMilIer ஹாஷ்டேக்கை தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

கேப்டன் மில்லர் படத்தின் ஒவ்வொரு டீசர் காட்சிகளையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டு, இப்படியொரு கூஸ்பம்ஸான தனுஷ் படத்தை முதன்முறையாக பார்க்கப் போகிறோம் என சோஷியல் மீடியாவையே தெறிக்கவிட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 15ம் தேதி கேப்டன் மில்லர் ரிலீஸ் ஆகும் என்கிற அறிவிப்பை டீசர் ரிலீஸ் உடன் கொடுத்து தனுஷ் ரசிகர்களின் தூங்க விடாமல் கொண்டாட வைத்து விட்டனர். ஜெயிலர், லியோ, இந்தியன் 2, கங்குவா, விடாமுயற்சி என தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய படங்களாக வெளியாக உள்ள நிலையில், அந்த பட்டியலில் மிகவும் முக்கியமான படமாக கேப்டன் மில்லரும் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் 15ம் தேதி வேறு எந்த படமாவது போட்டிக்கு ரெடியா? என தனுஷ் ரசிகர்கள் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...