“யோகி பாபுவின் ‘வானவன்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியீடு”

 “யோகி பாபுவின் ‘வானவன்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியீடு”

யோகி பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வானவன்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

யோகிபாபு அடுத்து நடிக்கும் புதிய படமான ‘வானவன்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை ‘மாவீரன்’ இயக்குநர் மடோன் அஸ்வின் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக யோகிபாபு இணைந்த ‘மாவீரன்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து ‘ஜெயிலர்’, ‘அயலான்’, ‘எல்ஜிஎம்’, ‘கங்குவா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் மாஸ்குரேட் என்ற வெப் சீரிஸை இயக்கிய சஜின் கே.சுரேந்திரன், தற்போது யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாஸ்டர் ஷக்தி ரித்விக், ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார்.

பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தை ‘ஈடன் ஃபிளிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார். மல்டி ஸ்டாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் யோகிபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் மடோன் அஸ்வின் வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ‘வானவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...