“யூடியூபில் சாதனை படைத்த சூர்யாவின் ‘கங்குவா’ கிளிம்ஸ்”

 “யூடியூபில் சாதனை படைத்த சூர்யாவின் ‘கங்குவா’ கிளிம்ஸ்”

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோ யூடியூபில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. ஜெய்பீம் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திய நிலையில், விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம் அந்த ஹைப்பை இருமடங்காக்கியது.

விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே வரும் அந்த கதாபாத்திரத்தின் மூலம் ரோலக்ஸ் என்ற ஒரு புது அவதாரத்தையே சூர்யா எடுத்தார். சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், பாலிவுட்டில் நடிகை திஷா பதானி, மிருணால் தாக்கூர், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது

சூர்யா 42 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு கங்குவா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கங்குவாவிற்கு அர்த்தம் தெரிந்து கொள்ள கூகுளில் வலைவீசி தேடினார்கள். கங்கு என்றால் ஃபயர் என்றும் கங்குவா என்றால் பவர் ஆப் ஃபயர் என்று அர்த்தம் என்றும் சிறுத்தை சிவா விளக்கம் கொடுத்திருந்தார். இத்திரைப்படம் தமிழ் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளதால் அனைத்து மொழிக்கும் பொருத்தமான ஒரு பெயரை தேர்ந்து எடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு,படக்குழு கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் சூர்யா பலருடன் போரிட்டு வீழ்த்துவது போன்றும், பெரும் படைக்கு நடுவே நிற்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நேற்று நள்ளிரவு சரியாக 12.1 மணிக்கு வெளியான இந்த வீடியோ யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதைக்களம் கொண்ட இப்படத்திற்காக சூர்யா கடுமையாக உடற்பயிற்சி மொத்தமாக மாறி இருக்கிறார். நெஞ்சில் கிடக்கும் புலி நகத்துடன் குதித்து வந்து நலமா என கேட்கும் வீடியோவைப்பார்த்து மிரண்டு போன சூர்யாவின் பேன்ஸ், அந்த கிளிம்ஸ் வீடியோவை ரிப்பீட் மோடில் மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...